புதுக்கோட்டை அருகே 1500 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு, போலீசார் அதிரடி
புதுக்கோட்டை அருகே அன்னவாசல் பகுதியில் 1500 லிட்டர் கள்ளச் சாராயம் ஊறலை மது விலக்கு போலீசார் கண்டுப்பிடித்து அழித்தனர்.;
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கவிநாரிப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மதுவிலக்குத் துறை ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அண்ணா வாசல் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கவிநாரிப்பட்டி என்ற கிராமத்தில் ஐந்து பேரல்களில் எரிசாராயத்திற்கு ஊறல் போடப்பட்டுள்ளதை கண்டுப்பிடித்தனர். அந்த சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர்,
அதே போல் அதேப் பகுதியில் எரிசாராயத்திற்கு போடப்பட்ட 1,500 லிட்டர் சாராய ஊறல், 40 லிட்டர் சாராயம் உள்ளிட்டவைகளை கைப்பற்றிய போலீசார தரையில் கொட்டி அழித்தனர். சாராயம் காயச்சியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.