புதுக்கோட்டை மாவட்ட சதிர் நடனகலைஞர் முத்துகண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது
விராலிமலையை சேர்ந்த முத்துகண்ணம்மாள், தனது 7 வயதில் இருந்தே சதிர் நடனத்தை கற்று சதிராட்டத்தில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்;
மத்திய அரசின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது பெற இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை பகுதியை சேர்ந்த சதிர் நடன கலைஞர் முத்துகண்ணம்மாள்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதிர் நடன கலைஞர் முத்துகண்ணம்மாள் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் முத்துகண்ணம்மாள் ( 83). இவர், தனது 7 வயதில் இருந்தே சதிர் நடனத்தை கற்று சதிராட்டத்தில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவர் குடும்பத்தில் 6 தலைமுறையாக இந்த சதிர் நடனம் கற்று தேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றனர்.
விராலிமலை முருகன் மலைக்கோவில் சுவாமி கிரிவலத்தின் போது இவரது சதிராட்டம் முன்னே செல்லும். அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக முருக பெருமான் சதிராட்டத்தின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இன்றும் அப்பகுதி பெண்பிள்ளைகளுக்கு சதிராட்டம் கற்றுத்தரும் இவரிடம், தற்போது பிரபலமாக உள்ள பல நாட்டியக் கலைஞர்கள் சதிராட்டம் குறித்து பல சந்தேகங்களை கேட்டு அறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சதிராட்ட கலைஞரான இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.சதிராட்டத்தின் மீது இவர் கொண்டுள்ள இணைப்பின் காரணமாக இவ்விருது கிடைத்ததாக கூறப்படுகிறது.இவருக்கு இந்த விருது கிடைத்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.