முட்டையுடன் அடை காத்து இருந்த மலைப்பாம்பை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொது மக்கள்

அன்னவாசல் அருகே காட்டுப்பகுதியில் முட்டையுடன் அடை காத்து இருந்த மலைப்பாம்பை பிடித்த காவல்நிலையத்தில் ஒப்படைத்த அப்பகுதி பொது மக்கள்.;

Update: 2021-07-14 16:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பனங்குடி காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாறைக்குள் மலைப்பாம்பு ஒன்று பத்திற்கும் மேற்பட்ட முட்டைகளுடன் அடைகாத்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரின் உதவியோடு அந்தப் பாம்பை பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றும் 10ற்கும் மேற்பட்ட முட்டையுடன் வந்த பொதுமக்களை பார்த்து முதலில் அச்சம் அடைந்த போலீசார் பின்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அந்த பாம்பையும், முட்டையையும் ஒப்படைத்தனர். போலீஸாரிடம் இருந்து மலைப்பாம்பு மற்றும் முட்டைகளை பெற்ற வனத்துறையினர் அதனைக் கொண்டு போய் நார்த்தாமலை காப்பு காட்டுக்குள் விட்டனர்.


Tags:    

Similar News