அன்னதான விழாவில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்ட குரங்குகள்

அன்னதான விழாவில் மக்களோடு மக்களாக குரங்குகளுக்கும் இலை போட்டு அன்னதானம் பரிமாறப்பட்டது

Update: 2021-11-23 07:45 GMT

குடுமியான்மலையில் சோம வாரத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி யில் மக்களோடு மக்களாக குரங்குகளும் அமர்ந்து உணவு சாப்பிட்ட காட்சி

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் கார்த்திகை மாத சோம வார்த்தை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைக்கு பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் மக்களுடன் அமர்ந்து   குரங்குகளும்  உணவருந்திய காட்சி  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி, இலுப்பூர் தாலுகா குடுமியான்மலையில் உலக சுற்றுலா தலமான மலைமேல் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு கார்த்திகை மாதம் சோம வாரத்தை முன்னிட்டு நான்கு திங்கட்கிழமைகளிலும் சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டு தோறும் காத்திகை மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடுமியான்மலை சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் மலைமேல் ஏறிச்சென்று சுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் கலந்து கொண்டு செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், நேற்று குடுமியான்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மலையிலேயே அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதான விழாவில் மக்களோடு மக்களாக குரங்குகளுக்கும் இலை போட்டு அன்னதானம் பரிமாறப்பட்டது. குரங்களும் மனிதர்களோடு அமர்ந்து அன்னதான விழாவில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டதை பக்தர்களும் பொதுமக்களும்  வியப்புடன் பார்த்துச்சென்றனர்.

Tags:    

Similar News