குளத்தூர் மக்களிடம் குறைகள் கேட்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குளத்தூர் பகுதியில் இன்று தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2021-06-28 11:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குளத்தூர் பகுதியில் இன்று தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர்  மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில், குளத்தூர் பகுதியில் குடிநீர் வசதி,மின்சார வசதி குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதேபோல் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் குளத்தூர் பகுதியில் தடுப்பூசி கிடைக்கிறதா? என்பது குறித்தும் பொது மக்களிடம் கேட்டறிந்தார். குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுகளை மேற்கொண்டார்

Tags:    

Similar News