அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: மாநிலங்களவை திமுக எம்பி திறந்து வைப்பு

விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்

Update: 2021-10-08 10:37 GMT

திமுக எம்பி. அப்துல்லா

 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாநிலங்களவை எம்பி அப்துல்லா துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் விளைந்த நெல் மணிகளை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பல்வேறு இடங்களில் கொட்டி வைத்துள்ளார். நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசுக்கு விவசாயிகள் ஒரு கோரிக்கை வைத்தனர்.அதில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாநிலங்களவை எம்பி அப்துல்லா திறந்து வைத்தார். நிகழ்வில், அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சந்திரன்,  திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News