விராலிமலையில் அ.தி.மு.க., தி.மு.க வேட்பாளர்கள் 'பகீர்' வாக்கு சேகரிப்பு

விராலிமலை தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றிஇல்லையேல் சாவு என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-03-23 11:34 GMT

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் முக்கியமான தொகுதியாக கருதப்படுவது விராலிமலை சட்டமன்றத் தொகுதி தொகுதி தான்.  தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று தற்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரும் விஜயபாஸ்கர் மீண்டும் மூன்றாவது முறையாக விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார்,

இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் இரண்டாவது முறையாக  போட்டியிடுகிறார்.  ஆனாலும் விராலிமலை தொகுதிகள் 3 முறை வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.  தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தொகுதி விராலிமலை. இந்த  தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தென்னலூர் பழனியப்பன் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பொழுது என்னுடைய வீடு, பெட்ரோல் பேங்க் அனைத்தையும் விற்றுவிட்டு தற்போது தற்போது தேர்தலில் நின்று வாக்கு கேட்டு வருகின்றேன். இந்த தடவை நான் வெற்றி பெறவில்லை என்றால் உயிரை விடுவதை தவிர வேறு ஒன்றுமில்லை என கண்ணீர் மல்க கூறி வாக்கு சேகரித்து  வருகிறார்.

 தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு படி மேலே போய் எப்போதாவது வந்து   உங்களிடம் என்னுடைய சொந்த பெட்ரோல் பங்க், வீடு என அனைத்தையும் விற்றுவிட்டு தற்போது தேர்தலை சந்திக்கிறேன்  என கூறி வருகிறார். பத்து வருடமாக இந்த தொகுதியை சுற்றி வந்து  அனைத்து நல்ல திட்டங்களையும் செய்து பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்று தற்போது வேட்பாளராக களமிறக்கப்பட்ட நான் வாக்குகள் கேட்டு வருகின்றேன்.

நான் வெற்றி பெறவில்லை என்றால் நான் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என அவரும் கண்ணீர் மல்க பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விராலிமலை தொகுதியில் வாக்காளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மக்களின் தீர்ப்பில் உள்ளது.  



Tags:    

Similar News