சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய தமிழக அமைச்சர்

சாலை விபத்தில் சிக்கியவரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காப்பாற்றினார்.;

Update: 2021-04-06 11:27 GMT

   புதுக்கோட்டை கீரனூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை காரிலிருந்து இறங்கி ஓடி அமைச்சர் விஜயபாஸ்கர் காப்பாற்றினார். 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிடுவதற்காக  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காரில்  சென்று கொண்டிருந்தார்.   அப்போது, எதிர்பாராவிதமாக பாரதிதாசன் பல்கலைகழகம் அருகே கைநாங்கரை நெடுஞ்சாலையில்  கார் ஒன்று சாலையில் கவிழ்ந்தது. உடனே இதைப் பார்த்த அமைச்சர் காரில் இருந்து இறங்கி ஓடினார். உடனே  விபத்தில் காயமடைந்த அண்டக்குளம் அப்துல்லாவை  கட்சி நிர்வாகிகளுடன் தூக்கினார்.  பின்னர் கார் ஓட்டி வந்த அப்துல்லாவை முதலுதவி செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார்.



Tags:    

Similar News