விராலிமலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்: மக்கள் அச்சம்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட தடுப்பு அணை தற்போது பெய்த மழையினால் சேதமடைந்தது.

Update: 2021-12-10 08:30 GMT

விராலிமலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை

விராலிமலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் பெரியகுளம் சுமார் மூன்று மீட்டர் நீளம் 15 மீட்டர் சுற்றளவு கொண்டதாகும். இந்த பெரியகுளம் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு மழைநீர் நிரம்பி வழிகிறது.

இந்த குளத்தில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதிக்காக, கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட தடுப்பு அணை தற்போது பெய்த மழையினால் சேதமடைந்தது. உடனடியாக தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் மழையினால் நீர் நிரம்பி உள்ள குளத்தின் நீர் அதிக அளவில் வெளியேறியது இதன் காரணமாக தடுப்பணை தாக்குப்பிடிக்க முடியாமல் அணைக்கட்டு தற்போது உடைந்து விழுந்து வருகிறது. முழுவதுமாக தடுப்பணை உடைந்தால் அதிக அளவில் தடுப்பணை வழியாக வெள்ளநீர் குளத்தில் இருந்து வெளியேறி வருவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் மெள்ள நீர் புகுந்து விடும் என அப்பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News