புதுக்கோட்டை நேரு யுவாகேந்திரா சார்பில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் இணைந்து 33 கிலோ பிளாஸ்டிக் பைகள் சுத்தம் செய்து சேகரிக்கப்பட்டது;

Update: 2021-10-11 12:16 GMT

தாய்மை நண்பர்கள் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நேருயுவாகேந்திரா வின் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது

தாய்மை நண்பர்கள் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நேருயுவாகேந்திரா வின் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கு தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதே போல் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலூகா, வீரப்பட்டி கிராமத்தில் தாய்மை நண்பர்கள் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நேருயுவாகேந்திரா வின் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பிளாஸ்டிக் உபயோகிப்பது தவிர்க்கவும் பற்றிய உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் இனைந்து 33 கிலோ பிளாஸ்டிக் பைகள் சுத்தம் செய்து சேகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,  தேசிய தன்னார்வலர்‌ முத்துமாரி மற்றும் உலக சாதனையாளர் மணிகண்டன் நன்றி உரை கூறினார்..


Tags:    

Similar News