முறைகேடாக நடத்திவந்த குழந்தைகள் காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைப்பு

குழந்தைகள் காப்பகத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வசூல் செய்ததுடன் குழந்தைகளை சித்திரவதை செய்வதாக புகார் வந்தது;

Update: 2021-10-03 03:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே முறைகேடாக நடத்திவந்த குழந்தைகள் காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

புதுக்கோட்டை அருகே குடுமியான்மலையில் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு முறைகேடாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வெளிநாட்டிலிருந்து நிதி வசூல் செய்ததோடு காப்பகத்தில் உள்ள ஏழு குழந்தைகளைக் சித்திரவதை செய்ததாக வந்த புகாரின் பேரில் இன்று அந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அலுவலர் குணசீலி நடவடிக்கை. தலைமறைவான ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அன்னவாசல் போலீசார் காப்பக நிர்வாகிகளான அரசு பள்ளி ஆசிரியர் கலைமகள் மற்றும் காப்பக கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை டாக்டர் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகம் என்ற பெயரில் கலைமகள் என்பவர் காப்பகம் நடத்தி வருகிறார் இவரது கணவர் ராஜேந்திரன் இந்த காப்பகத்தில் கண்காணிப்பாளராக உள்ளார்.கலைமகள் குடுமியான் மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அரசு ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.காப்பகம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று கலைமகள் காப்பகத்தை நடத்திக் வருகிறார்.

இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் கொடுமைப் படுத்தப் படுவதாக அரசு ஊழியர் எவ்வாறு காப்பகம் நடத்த முடியும் என்று பல்வேறு புகார்கள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி தலைமையில் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் காப்பகத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் அரசு அனுமதி பெற்று இருந்தும் அரசு ஊழியராக பணியாற்றும் ஒருவர் எவ்வாறு காப்பகம் நடத்தி வருகிறார் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் அங்குள்ள சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் காப்பகத்தில் உள்ள சிறுவர்களை அவர்கள் பல்வேறு சித்திரவதைகள் செய்து கொடுமை படுத்தியதாக சிறுவர்கள் அதிகாரியிடம் கூறினர்.  அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கலைமகள் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் அவர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான காப்பக நிர்வாகிகள் கலைமகள் மற்றும் ராஜேந்திரனை தேடி வருகின்றனர்

அரசு ஊழியர் எவ்வாறு காப்பகம் நடத்த முடியும் இது வழிவகை உண்டா அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கல்வி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.இதன்பிறகு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்..

Tags:    

Similar News