மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம்

ஆர்வத்துடன் கண்டு களித்த பொதுமக்கள்;

Update: 2021-07-05 16:07 GMT

சித்தன்னவாசல் சுற்றுலாதளம் இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆர்வத்துடன் சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள்

கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு தரவுகளை தளர்த்தி இன்று முதல் சுற்றுலாத் தளங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சித்தனவாசல் சுற்றுலாதளம் இன்று திறக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தளம் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே ஆர்வமாக மக்கள் வந்தனர். தென்னிந்தியாவின் அஜந்தாகுகை என்று அழைக்கப்படும் அஜந்தா குகையை பார்ப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை, படகுகுளம், உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன முறையில் இசை நீரூற்று

அமைக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. தண்ணீர் தொடர்பான விளையாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை இதனால் சித்தன்னவாசல்  சுற்றுலா தலத்தில் படகு குளங்களுக்கு அனுமதியில்லை சுற்றுலா பயணிகள் சமணர் குடவரை கோவில், ஏழடிபட்டம் மலைமீது சுற்றி பார்ப்பதற்கு இணையவழியாக நுழைவு சீட்டு வழங்கப்பட்டது .

Tags:    

Similar News