அரசுப்பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
அரசுப்பள்ளிகளில் முதன்மைக் கல்விஅலுவலர்ஆய்வு;
புதுக்கோட்டை கல்வி மாவட்டம், பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி 2-7-2021பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் வருகை, புதியதாக சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் கல்வித்தகவல் மேலாண்மை முறைமையில் பதிவேற்றம் செய்தல், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கியவை உள்ளிட்ட விவரங்களை பதிவேடுகளை வாங்கி பார்த்து ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளி வளாகத்தூய்மை, கழிவறைத்தூய்மை ஆகியவற்றையும் பார்வையிட்டு தக்க அறிவுரைகள் வழங்கினார். குறிப்பாக கல்வித்தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றல் மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்துக்கூறினார்.
மேலும் கல்வித்தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அலைபேசியின் வாயிலாக ஆசிரியர்கள் நிவர்த்தி செய்ய கேட்டுக்கொண்டார்.