புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து பொம்மாடிமலை அருகே எதிரே வந்து கொண்டிருந்த அறுவடை இயந்திரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. தனியார் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த, திருமணமாகி பத்து நாட்களே ஆன ராம்நாடு பகுதியை சேர்ந்த சரண்யா(26) என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடேசன்(23) என்ற இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் பேருந்தில் பயணம் செய்த 29 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை, போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.