சாலையில் கிடந்த மலைப்பாம்பால் போக்குவரத்து பாதிப்பு

பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் எதிரே மதுரை செல்லும் சாலையில் சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு படுத்துக் கிடந்தது

Update: 2021-12-26 06:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையில் கிடந்த மலைப்பம்பால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது

 சாலையில் கிடந்த மலைப்பாம்பால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் எதிரே  பொன்னமராவதியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு படுத்துக் கிடந்தது.

இதனையடுத்து அந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் அந்தப் பாம்பை கண்டு மிரண்டு சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். மேலும் ஒரு சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு  மலைப் பாம்பு சாலையில் கிடந்ததை பார்த்து திகைத்து நின்றனர். எதையோ விழுங்கிய மயக்கத்தில் கிடந்த   அந்த பாம்பானது சாலையில் இருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து அருகே உள்ள முட்புதருக்குள் சென்றது. இதனால் பொன்னமராவதி- மதுரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News