ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி ஆலோசனையின்படி, காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மகப்பேறு மருத்துவர் ஹேமலதா பரிசோதனை மேற்கொண்டார். இதில் 57 கர்ப்பிணி தாய்மார்களுக்கு எடை, உயரம், இரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்தனர்.