உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளிசூலாயுதம் நினைவுப்பரிசு: திமுக நிர்வாகிகள் வழங்கல்

திருமயம் தொகுதியில் லெனாவிலக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது;

Update: 2021-09-12 07:28 GMT

திருமயம் அருகேயுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நிகழ்வில், உதயநிதிஸ்டாலினுக்கு வெள்ளிசூலாயுதம் வழங்கிய அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி சூலாயுதம் நினைவுப் பரிசு வழங்கிய கட்சி நிர்வாகிகள்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்  என்று பெயர் மாற்றம் செய்யப்படும்  அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக,  இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். பிற்பகலில் திருமயம் தொகுதிக்குள்பட்ட லெனா விலக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, அங்கு வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், திமுக நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலினுக்கு,  வெள்ளி சூலாயும் மற்றும் வெள்ளி வாள் ஆகிய நினைவுப்பரிசுகளை   வழங்கினர்.

 

Tags:    

Similar News