அரிமளம் அருகே ஜல்லி ஏற்றி சென்ற லாரி மோதி 13 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
இரவு நேரம் என்பதால் ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது மோதியது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகில் ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி. இவர், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் கொட்டகை அமைத்து செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார்.
இந்நிலையில், ஆடுகளை மேய்த்துவிட்டு நேற்று இரவில் அரிமளத்தில் இருந்து திருமயம் செல்லும் சாலை ஓரம் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தது. அப்போதுஇன்று அதிகாலையில் அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது மோதியது. இதில்,13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானது. மேலும், இரண்டு ஆடுகள் பலத்த காயம் அடைந்தது.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ஆளப்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த உடையப்பன், அரிமளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து, ஆட்டின் உரிமையாளர் மதி அளித்த புகாரின் பேரில், அரிமளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.