பொன்னமராவதி பகுதியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல்
வட்டாட்சியர் ஜெயபாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது;
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசு நெகிழிப் பைகளை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை எந்தக் கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது அப்படி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேபோல் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனை செய்பவர்கள் மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் அண்ணா சாலை, சந்தைப் பகுதிகள், பஜார் மெயின் ரோடு, காந்தி சிலை, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளை பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி, பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தலைமையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் ரெய்டு நடத்தியதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது