பொன்னமராவதியில் சசிகலா பிறந்தநாள்: பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அமமுகவினர்
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பிறந்தநாளை கொண்டாடினர்.;
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சசிகலாவின் 67 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பேருந்து நிலையம் முன்பு, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடினர்.