குடியரசுதின விழா: பொன்னமராவதியில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாட்டம்

பொன்னமராவதியில் பல்வேறு பகுதிகளில் குடியரசு தினவிழாவையொட்டி தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது;

Update: 2022-01-26 10:13 GMT

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியப் பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி தேசியக்கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்

பொன்னமராவதியில் பல்வேறு இடங்களில் நாட்டின்  73-ஆவது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பல்வேறு பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . நாட்டின்  73-ஆவது குடியரசு தின விழா, பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில், நிலைய அலுவலர் சந்தானம் தேசியக் கொடியேற்றினார்.

பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தனபாலன் தேசியக்கொடியேற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் சக்திவேல் தேசியக்கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியப் பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி தேசியக்கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா  கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News