பொன்னமராவதி அருகே ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
பொன்னமராவதி அருகே ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் இராஜேந்திரன் தலைமையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு ஏழை, எளிய தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் 100 நபர்களுக்கு அரிசி, முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் மணி, தேனூர் ஊராட்சி மன்றதலைவர் கிரிதரன், மாவட்டச் செயலாளர் வெள்ளையாண்டிப்பட்டி பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் இராஜேந்திரன், காரையூர் முன்னாள் வட்டார தலைவரும், மாவட்ட பொதுச்செயலாளருமான அப்பாஸ், உட்பட பலர் கலந்து பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.