அரசுப் பள்ளிகளில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது
அரசுப்பள்ளிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தமிழக அரசு செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடந்து வருகிறது.
அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பள்ளிகள் கடைப்பிடித்து செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி அரசு பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அதன்தொடர்ச்சியாக, இன்று புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி, ஒத்தைப்புளிகுடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளிகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் திடீர் ஆய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி மேற்கொண்டார்.இந்த ஆய்வில் தலைமையாசிரியர் கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.