அன்பா பழகுங்க; நட்போட இருங்க - காவலர்களுக்கு புதுகை எஸ்.பி. அறிவுரை
காவல்துறை உங்கள் நண்பன் என்ற நட்புறவோடு அன்பாகவும், நட்புடனும் பொதுமக்களிடம் போலீசார் பழக வேண்டும் என்று, புதுக்கோட்டை எஸ்பி அறிவுறுத்தினார்.;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பல்வேறு இடங்களில் பணிகளை மதிப்பிட்டார். பின்னர், காவலர்களிடம் அவர் பேசுகையில், காவல்துறையினர் பொது மக்களிடம் அன்போடும், நட்புணர்வோடும் பழக வேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் என்ற நட்புறவுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்து, கட்டாயம் முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், வாகனத்தின் ஆவண நகல் போன்ற ஆவணங்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கண்ணியத்துடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வில் பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், ஆய்வாளர் தனபாலன், எஸ்ஐ சுப்பிரமணியம், தலைமைக்காவலர் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.