பொன்னமராவதியில் திமுகவினர் மக்களுக்கு முட்டை,ஆட்டுக்கால் சூப் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு முட்டை, ஆட்டுக்கால் சூப், ஆகியவற்றை வழங்கினர்.;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்திமுக சார்பில் பெரியார் நகர் பகுதி பொது மக்களுக்கு முட்டை மற்றும் ஆட்டுக்கால் சூப் வழங்கப்பட்டது.கொரோனோ நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்க பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா அப்பகுதி மக்களுக்கு முட்டை மற்றும் ஆட்டுக்கால் சூப்பினை வழங்கினார்.இதில் திமுக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.