ஆடு திருடும் கும்பலைப்பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆடுகளை காணவில்லை என பொதுமக்களின் புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்தன

Update: 2022-01-22 03:47 GMT

பைல் படம்

ஆடு திருடும் திருடர்களை பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பலர் வேலை இல்லாமல் இருந்ததால் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.அதில் முக்கியமானதாக இருந்தது ஆடு திருடும் தொழில். ஆடு திருடும் தொழிலில் ஈடுபட்ட திருடர்கள் பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆடுகளை காணவில்லை என பொதுமக்கள்  சார்பில் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து காவல்துறையினர் ஆடு திருடும் கும்பலை தேடி வந்த நிலையில்,  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த  சிறப்பு உதவி ஆய்வாளர்  புதுக்கோட்டை அருகே ஆடு திருடும் கும்பல்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டர்.

அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஆடு திருடும் கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்து கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் காவல் துறையினர் ஆடு திருடும் கும்பலை பிடித்து ஆடுகளை பறிமுதல் செய்து ஆடு திருட பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.  இந்த நிலையில் நேற்று திருக்கோகர்ணம் மற்றும் அரிமளம் பகுதிகளில் ஆடு திருடும் கும்பலை காவல்துறையில் வளைத்து பிடித்து ஆடுகள் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்து ஆடு திருடி. 2 பேரை கைது செய்தனர். போலீஸாரின் அதிரடி  நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News