பொன்னமராவதி அருகே கோழி ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்து ஓட்டுனர் பலி
பொன்னமராவதி அருகே இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியிலிருந்து பிராய்லர் கோழி ஏற்றிவந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் மினிவேன்
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் எல்லைக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியிலிருந்து பிராய்லர் கோழி ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் முகமது ரபீக் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வண்டியில் வந்த மற்ற இருவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஓட்டுநர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதி வந்தனாக்குறிச்சியை சேர்ந்த காஜா மைதீன் மகன் முகமது ரபீக் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.