பொன்னமராவதி அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை; இருவர் கைது
பொன்னமராவதி அருகே சொத்து தகராறில் கடப்பாறையால் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டி -இடையன்பாறை கிராமத்தை சேர்ந்த சின்னையா மகன் நடேசன் வயது 50 விவசாயி. இவரது பெரியப்பா முத்தாண்டியும் அவரது மனைவி அடக்கியும் இடையன்பாறை கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
தனது பெரியப்பா இறந்துவிட்டதால், தனது பெரியம்மாவான அடிக்கியை நடேசன் பராமரித்து வந்துள்ளார். அடக்கி வசித்து வந்த தனது வீட்டின் அருகே நடேசன் ஆடுகளுக்கு தகர கொட்டகை அமைத்துள்ளார்.
இதனையறிந்த அடக்கியின் தங்கை கொன்னையம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி மகன் முருகன் (28) ,சுப்ரமணியன் (27) ஆகிய இருவரும் இடையான்பாறைக்கு வந்து எனது பெரியம்மா அடக்கியின் சொத்து எங்களுக்கு தான் என்று தகர கொட்டகையை பிரித்து எரிந்துள்ளார். ஆத்திரமடைந்த நடேசனுக்கும் அவர்களுக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் முருகன் மற்றும் சுப்பிரமணியன் கையில் வைத்திருந்த இரும்பு கடப்பாறையில் நடேசன் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்து நடேசனின் மனைவி பஞ்சவர்ணம் காரையூர் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து காரையூர் போலீசார் நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காரையூர்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நடேசனை கொலை செய்த முருகன், சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சொத்து தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.