பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா

பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடைபெற்றது.

Update: 2021-12-10 08:21 GMT

பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு விழாவில் புனித நீரை எடுத்துச் செல்லும் சிவாச்சாரியார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பட்டமரத்தான் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்காக மூன்று நாட்களுக்கு முன்பாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு கைலாய வாத்தியங்களுடன் பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊர்வலமாக சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு எடுத்துச்சென்று தங்கமுலாம் பூசப்பட்ட கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.

அப்போது கருட பகவான் வட்டமிட்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News