திருமயத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

Update: 2021-07-15 16:34 GMT

திருமயத்தில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் காமராஜர் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் தலைமையில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காமராஜரின் குருவான தீரர் சத்தியமூர்த்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் அழகு ராமச்சந்திரன், முருகேசன், நகர செயலாளர் துரை முத்து ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு நிர்வாகிகள் அக்பர் அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News