வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

இளைஞர்களுக்கு எந்த வகையில் வேலை வாய்ப்பினை உருவாக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது;

Update: 2021-09-14 11:19 GMT

படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக.                ஊராட்சித் தலைவர்களுக்கான.         ஆலோசனை கூட்டத்தை ஒன்றிய  பெருந்தலைவர் மேகலா முத்து     குத்துவிளக்கு ஏற்றி துவக்கி   வைத்தார்



படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில்,  தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை,அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலாமுத்து தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடக்கி வைத்தார்.

உதவி மகளிர் திட்ட அலுவலர் அமுதா,  வட்டார வளர்ச்சி ஆணையர் அமுதவல்லி,  வட்டார வளர்ச்சி கிளை ஊராட்சிகள் ரவி,  வட்டார இயக்க மேலாளர் தனமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஆனந்த் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எந்த வகையில் வேலை வாய்ப்பினை உருவாக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில், வட்டார ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி தனலட்சுமி வசந்த, மல்லிகா, கரோலின் (என்ற) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News