ஜெயலலிதா ஏற்றிய விளக்கை அணைய விடாமல் பாதுகாப்பது உங்கள் கையில்தான் உள்ளது என திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் கூறினார்.
அதிமுக சார்பில் மீண்டும் திருமயம் தொகுதியில் வைரமுத்து போட்டியிடுகிறார். அவர் பேசும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நான் கடந்த தேர்தலில் திருமயம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அறிந்து திருமயம் தொகுதியில் வைரமுத்து எப்படி தோல்வி அடைந்தார் என உளவுத்துறை மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்கும் பொழுது சிறப்பாக பணியாற்றினார். ஆனால் எப்படி தோல்வி அடைந்தார் என தெரியவில்லை என கூறியதை அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு உடனடியாக தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக பதவி வழங்கினார்.எனவே ஜெயலலிதா ஏற்றி வைத்த விளக்கு அணைய விடாமல் பாதுகாப்பது உங்கள் கையில் தான் உள்ளது. எனக்கு இந்த முறை ஒரே ஒரு தடவை வாய்ப்பளியுங்கள் என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கின்றேன் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.