ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்

கணக்கெடுப்பு பணியினை புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்

Update: 2021-08-18 14:25 GMT

திருமயம் பகுதிகளில்  பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஆய்வு   செய்த பள்ளி கல்வித்துறை  அதிகாரிகள்.

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின கணக்கெடுப்பு பணி  திருமயம் பகுதியில் இன்று நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆலோசனையின்படி நடைபெற்ற கணக்கெடுப்பு பணியி னை புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, மணவாளன்கரை, இளஞ்சாவூர் குடியிருப்பு பகுதியில் 6-14 வயதுக்கு உட்பட்ட இரண்டு (5 ஆம் வகுப்பு) இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அம்மாணவர்கள் இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பில் நேரடிச் சேர்க்கையாக, மாவட்ட உதவி திட்ட அலுவலர் முன்னிலையில் சேர்க்கப்பட்டனர். அம்மாணவர் களுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்கள் அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் ஓலக்குடிப்பட்டி, பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு இடைநின்ற மாணவ மாணவிகள் 3 பேர் கண்டறியப்பட்டனர். மாணவ மாணவர்களின் பெற்றோர்களிடம் , திருமயம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்க வைக்க அறிவுறுத்தப்பட்டது.

திருமயம் பகுதியில் நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் மணிமாறன், கருப்பையா, திருமயம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம், ஆசிரியர் பயிற்றுநர் சின்னையா மற்றும் சிறப்பாசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News