ராயல் லயன்ஸ் கிளப்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ராயல் லயன்ஸ் கிளப்பில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வர்த்தகர் கழக மஹாலில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான ராயல் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ராயல் லயன்ஸ் சங்கத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விழாவில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் அன்புசெல்வம், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோரை முன்னாள் மாவட்ட ஆளுநர் சுவாமிநாதன் பணி அமர்த்தி, சேவை திட்டங்களை துவக்கி வைத்தார்.
இதில் மண்டல தலைவர் சுப்பிரமணியன், வட்டார தலைவர் மெகாராஜ் பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேவை திட்டங்களாக நலிவடைந்த நபர்களுக்கு அரிசிப்பை, தையல் இயந்திரம், விவசாய கருவிகள், ஏழை மாணவிக்கு மூன்றாண்டு கல்வி கட்டண உதவித்தொகைக்காகன காசோலை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆளுநர் வழங்கினார்.
இதில் முதல் நிலைத்துணைத் தலைவர் முருகேசன், இரண்டாம் துணைத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொன்னமராவதி லயன்ஸ் சங்கம், பொன்னமராவதி சைன் லயன்ஸ் சங்கம், சிட்டி லயன்ஸ், கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் உள்ளிட்ட ராயல் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.