அரிமளம் ஊராட்சியில் புதிய பள்ளிக்கு அமைச்சர் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம்,ஓனாங்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்.;

Update: 2021-07-19 06:08 GMT

அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஓனாங்குடி கிராமத்தில் புதிய பள்ளி  கட்டடத்திற்கு அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஓன்றியம், ஓனாங்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனிருந்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்றையதினம் ஓனாங்குடி கிராமத்தில் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

திருமயம் சட்டமன்ற தொகுதியிலும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இப்பகுதிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கிடைக்கப்பட்டு செயல்பட்டு வருவதுடன் தேவைப்படும் இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருமயம் தொகுதியில் பொதுமக்களுக்கு சீரான மின்வினியோகம் வழங்கும் வகையில் பல்வேறு துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அக்பர்அலி, ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News