முன்னாள் எம்எல்ஏ நினைவு தினம்: ப.சிதம்பரம், அமைச்சர் ரகுபதி மரியாதை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2021-09-11 06:31 GMT

முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா   நினைவு தினத்தை முன்னிட்டு, மலர்   தூவி மரியாதை செய்த முன்னாள்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  தமிழக சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி உள்ளிட்டோர். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், காலஞ்சென்ற திருமயம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு,  பொன்னமராவதியில் உள்ள திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு வலைதள பொறுப்பாளர் முரளி சுப்பையா இல்லத்தில் நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் , ஆலவயல் சுப்பையாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருமயம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராமசுப்புரம், திருமயம் தொகுதி திமுக ஒன்றிய செயலாளர் அழகுசிதம்பரம், பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் அடைக்கலம் மணி உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News