பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று மீன்பிடித்த பொதுமக்கள்
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டியில் உள்ள வில்லியநத்தான் கண்மாய் ,ஓவியன்கண்மாய் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
பொன்னமராவதி அருகே மீன்பிடித்து திருவிழாவில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் குளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் புதுப்பட்டியில் உள்ள வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன்கண்மாய் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் கண்டியாநத்தம் கிராம பொதுமக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, போன்ற மீன்படி சாதனங்களை வைத்து மீன் பிடித்தனர். இரால், விரால்மீன், கெழுத்தி, கெண்டை, கொரவை, உளுவை போன்ற பல்வேறு வகையான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.பிடித்த மீன்களின் ஒரு பகுதியை பக்கத்து கிராமங்களில் உள்ள உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.இது போன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாகும்