பொன்னமராவதியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பேரூராட்சி அலுவலகம்,காவல் நிலையம் பத்திரப்பதிவு அலுவலகங்கள் முன் நடத்தப்பட்டது

Update: 2022-04-20 10:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு    தீயணைப்பு துறை சார்பில் தீ    பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

பொன்னமராவதியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு  ஒத்திகை நடத்தப்பட்டது ..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரூராட்சி அலுவலகம்,காவல் நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தீ  தடுப்பு  விழிப்புணர்வு  ஒத்திகை மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

தீ தொண்டு வார இறுதி நாளையொட்டி திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை பானுப்பிரியா ஆலோசனையின்படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 14.4.2022முதல் 20.4.2022வரை வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி,போக்குவரத்து பணிமனை,பேருந்து நிலையம்,காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, நீர்நிலைகள், இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது குறித்த செயல் முறை விளக்கம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் பேசுகையில் தீ விபத்து நிகழும் போது முன் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க வேண்டும்,தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் 101 எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நிலைய அலுவலர் சந்தானம் விளக்கி கூறினார்.

Tags:    

Similar News