அரிமளம் அருகே இரு தரப்பு பிரச்னை: திருவிழாவை அரசே நடத்த சமரச கூட்டத்தில் முடிவு

பேச்சுவார்த்தையில் சிவராத்திரி விழா ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-02-24 15:07 GMT

அரிமளம் அருகே இரு தரப்பு பிரச்சினையை அடுத்து கோயில் திருவிழாவை அரசு சார்பில்.   நடத்தப்படும் என திருமயத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு

அரிமளம் அருகே இரு தரப்பு பிரச்னையை அடுத்து கோயில் திருவிழாவை அரசு சார்பில் நடத்தப்படும் என சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நம்பூரணிப்பட்டி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான செம்பக சாத்தையனார் கோயில் உள்ளது.இங்கு கடந்த காலங்களில் நடைபெற்ற வரவு செலவு கணக்கு காரணமாக இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து கோயிலில் விழா நடத்துவது இருதரப்பு பிரச்னையை உருவாக்கியது.

இதனிடையே எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி செம்பக சாத்தய்யனார் கோயில் சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.ஏற்கெனவே கோயில் தொடர்பாக இரு தரப்பு பிரச்னை நிலுவையில் உள்ளதால் கோயில் விழா நடத்துவது குறித்து திருமயம் தாசில்தார் தலைமையில்  சமாதான கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் இருதரப்பிலும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடததப்பட்டது. பேச்சுவார்த்தையில் சிவராத்திரி விழா ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக எழுந்த கேள்விக்கு சிவராத்திரி விழா நடைபெற்ற பின்னர் மீண்டும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தாசில்தார் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News