புதுக்கோட்டை அருகே செம்மலாபட்டியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது;
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆலவயல் செம்மலாபட்டியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிதமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டஆட்சியர் கவிதா ராமு உத்தரவுப்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்யமூர்த்தி ஆலோசனை யின் படி ஒருங்கிங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் புதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் கலைக்குழுவினரின் பிரசார நிகழ்ச்சி, ஆலவயல் ஊராட்சி மன்றதலைவர் சந்திரா சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
செம்மலாபட்டி தொடக்கபள்ளியில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலராக சேர்வது பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் நடித்து காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியிலிருந்து மாணவர்களிடம் கேள்வி கேட்கபட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, ஆசிரிய பயிற்றுனர்கள் சிவகுமார்,கல்யாணி யசோதா,கவிதா , செம்மலாபட்டி தொடக்கபள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன், ஊராட்சி செயலர் பஞ்சவர்ணம், வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.