கீழ்ப்பனையூாில் இலலம் தேடி கல்வி திட்டம்: ஒன்றியக்குழு தலைவர் மேகலாமுத்து தொடக்கம்

மாணவ-மாணவிகள் கல்வி கற்காமல் வேலைகளுக்குச்சென்று விடுவதைத் தடுக்கும் நோக்கில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது

Update: 2022-01-06 08:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்பனையூாில் இலலம் தேடி கல்வி மையம் சோ்மன் மேகலாமுத்து துவக்கி வைத்தாா்

கீழ்ப்பனையூாில் இலலம் தேடி கல்வி  திட்டத்தை அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து துவக்கி வைத்தாா்.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  அறிவுறுத்தலின்படியும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பனையூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை  அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி ஆணையர் அமுதவல்லி,  கீழப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள்,  ஊராட்சி மன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் சேது பாஸ்கரன், வேளாண்  கல்லூரி மற்றும் புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவ .மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னர் ஒன்றியக்குழுத்தலைவர்  மேகலா முத்து பேசியதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளி மாணவர்கள் யாரும் கல்வி கற்காமல் வீடுகளில் இருந்து விடக்கூடாது.  மாணவ-மாணவிகள் கல்வி கற்காமல் வேலைகளுக்குச் சென்று விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை உருவாக்கி தற்போது தமிழ்நாடு முழுவதும் பள்ளி செல்லாமல் வீடுகளில் இருக்கும் மாணவ மாணவிகளை கண்டுபிடித்து கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் பொதுமக்களிடம் மாணவ மாணவிகள் பள்ளி செல்ல வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வையும் இல்லம் தேடி கல்வி மூலம் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, இன்று நமது ஊரிலும் இல்லம் தேடி கல்வி  திட்டம்  துவங்கப்பட்டுள்ளது அனைத்து மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

Tags:    

Similar News