தில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி : பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய எம்எல்ஏ
தில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றியடைந்ததையடுத்து எம்எல்ஏ சின்னதுரை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்;
தில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றியடைந்ததையடுத்து எம்எல்ஏ சின்னதுரை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தலைநகர் தில்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து ஒரு வருடமாக போராடி வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. ஆனாலும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனை வரவேற்கும் விதத்தில் டெல்லி விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அதேபோல் தமிழகம் முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பதை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் விவசாயிகள் இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து மகிழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.
அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற நிகழ்வில், 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருப்பதை வரவேற்கும் விதத்தில், கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.