மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருமயத்தில் மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ரசித்த பொதுமக்கள்.

Update: 2022-03-03 13:31 GMT

அரண்மனைபட்டியில் ஸ்ரீகுருந்துடைய அய்யனார் கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

திருமயம் அருகே மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ரசித்த பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரண்மனைபட்டியில் ஸ்ரீகுருந்துடைய அய்யனார் கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

போட்டியில் பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடியும் சிரிய மாட்டு வண்டியில் 24 ஜோடி வண்டிகள் என பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது. அரண்மனைபட்டியில் துவங்கிய பந்தயம் கோனாபட்டு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

சாலையில் துள்ளிக்குதித்து போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

Tags:    

Similar News