பொன்னமராவதியில் நிவாரணத் தொகை ரூ 2000 வழங்கிய அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொரோனா நிவாரணம் ரூ 2000த்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் அறிவித்த கோவிட் நிவாரணத் தொகையினை இன்று அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட காரையூர்நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன்உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
.இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதிதமிழக முதலமைச்சர் கோவிட் தடுப்பு பணிகளைபோர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசுபொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இதுவரைஇருந்து வந்த தேவையற்ற நிதி செலவுகளை குறைத்து மக்களின் நிதிஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில் தாய்மார்கள் நகர பேருந்துகளில் கட்டணமின்றிபயணிக்கும் வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றுகொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ள இத்தகைய தருணத்தில் முதல்கட்டமாககுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 முதலமைச்சர்உத்தரவில் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள 1,004 கூட்டுறவு பொது வினியோகத்திட்ட அங்காடிகளில்உள்ள 4,46,314 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.89 கோடி தமிழக அரசால்ஒதுக்கீடு செய்யப்பட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 15.05.2021முதல் நிவராண நிதி வழங்கப்பட்டு வருகிறது.என பேசினார்