அரிமளத்தில் ஏழை எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரிமளம் வடக்கு வட்டாரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
அரிமளத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வட்டார தலைவர் ராம. அர்ஜுனன் தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் மெய்யப்பன் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிமளம் வடக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு வேஷ்டி சேலைகள் காலண்டர்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வட்டார தலைவர் அர்ஜுனன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் மலைக்கொழுந்து, பிச்சை குட்டி, செல்லையா,மீனாட்சி சுந்தரம், பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வட்டார பொறுப்பாளர்கள், சந்துரு,சுப்பிரமணியன், முகமது அலி,வேலு, இளைஞர் காங்கிரஸ்,கண்ணன், துணைத் தலைவர் பார்த்தசாரதி, ராமையா, தாசன் மற்றும் மாவட்ட, வட்டார, நகர, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.