பிரதமர் மோடியை அவதூறாக பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.;
பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் பலர் அவதூறு பரப்பி வருகின்றனர். அதைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் காவல்நிலையத்தில் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு சில இடங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் பகுதியில் அறநிலையத் துறையில் பணிபுரியும் வைரவன் என்பவர் வாட்ஸ் ஆப் குழுக்களில் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருமயம் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் கண்ணனூர் முருகேசன் தலைமையில், திருமயம் காவல் நிலையத்தில் பிரதமர் மோடியை குறித்து வாட்ஸ் ஆப் குழுக்களில் அவதூறாக பேசிய அறநிலையத் துறையில் பணிபுரியும் வைரவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமயம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.