அரிமளம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தலைவர் மேகலா முத்து தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது;
தமிழகம் முழுவதும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறை குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சிறு குழந்தைகளை பெற்றோர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் அதேபோல் சிறு குழந்தைகள் கடத்துதல் சிறு குழந்தைகள் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட அரிமலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்களுக்கு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி ஆணையர் அமுதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ரவி, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் அவர்கள் அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.