ஆதனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருமயம் அருகே ஆதனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.;
திருமயம் அருகே ஆதனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி ஜல்லிக்கட்டு போட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் உள்ளிட்டவைகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தொகுதிக்கு உட்பட்ட ஆதனூர் ஸ்ரீ செங்கமல வள்ளி அம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியில் மொத்தம் 21 ஒரு ஜோடி மாடுகள் கலந்துகொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய மாட்டிற்கு எட்டு மைல் தூரமும், சின்ன மாட்டிற்கு 6 மைல் தூரமும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6:30 மணிக்கு துவங்கிய மாட்டு வண்டி எல்கை பந்தயம் போட்டியை காண்பதற்காக ஆதனூர் கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் சிறுவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் சாலை இருபுறமும் நின்று மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் இந்த மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரெக்க பரிசுகள் வழங்கி பாராட்டினர்