நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச். ராஜா இன்று திருமயம் கோர்ட்டில் ஆஜராகினார்.

Update: 2021-07-23 09:15 GMT

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா

கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனால் ஊர்வலம் செல்ல கூடாது என காவல்துறையினர் கூறியதையடுத்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதுதொடடர்பாக திருமயம் காவல்துறையினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குபதிவு செய்து, கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று அந்த வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 20 பேரில் இவருடன் சேர்த்து 2 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Tags:    

Similar News