குத்துச்சண்டை போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற ஜே ஜே கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஜே ஜே கல்லூரி மாணவிகள் கைப்பற்றினர்.;
புதுக்கோட்டை சிவபுரம் அருகே உள்ள ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு எடை பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஜேஜே கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வென்றனர்.
இந்த போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவரும் செயலாளருமான காளிதாசன் மற்றும் ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பரசுராமன், டாக்டர் சிவகுமார், ஜேஜே கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி துறை தலைவர் ஜெகதீஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.